காமராஜர் மணிமண்டபத்தை சீரமைத்து தியான மண்டபம்: முதல்வருக்கு, கொட்டிவாக்கம் முருகன் வலியுறுத்தல்

சென்னை: நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் கொட்டிவாக்கம் முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இடத்தில் மண்டபம் கட்டினார். அதில் அணையா விளக்கு மற்றும் பூங்கா ஆகியவற்றை அமைத்து பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்தார். மேலும் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க தமிழக அரசு ஆணையில் அறிவித்தார். இத்தகைய செயலால் தமிழக மக்களின் அன்பையும், பாராட்டையும் கலைஞர் பெற்றார்.

தற்போது காமராஜர் நினைவு மண்டபம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதை தமிழக அரசு உடனடியாக கவனம் கொண்டு சீர்செய்வதோடு, தியான மண்டபத்தை புதிதாக அமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் எண்ணமும், மாணவர்களின் கோரிக்கையும் என்பதால் வரும் ஜூலை 15ம்தேதி காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த கோாரிக்கையை நிறைவேற்றி தர கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: