கோவாக்சின் தடுப்பூசி 77.8% நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது: மருத்துவ நிபுணர்கள் தகவல்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி 77.8% நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை. முதல் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்படாமலேயே, கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது சர்ச்சையே ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-ம் கட்ட பரிசோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸை 77.8% கட்டுப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள், ஆய்விற்காகவும் ஒப்புதலுக்காகவும் டிசிஜிஐ அமைப்பின் நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் அடிப்படையில், அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு, உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை பெற உதவும் என கூறப்படுகிறது.

மூன்றாவது கட்ட பரிசோதனை அடிப்படையில், முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோவாக்சின் தடுப்பூசி 81 சதவீதம் திறனுடையது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்து. மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும், தொற்று ஏற்பட்டால் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு முற்றிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories: