சிமெண்ட் விலை ரூ.30 குறைப்பு!: கட்டுமான பொருட்கள் விலையை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை...அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிமெண்ட் விலை 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சிக்காலம் முதலே படிப்படியாக அதிகரித்து வந்ததாக குறிப்பிட்டார். கடந்த மார்ச்சில் 420 ரூபாயாக இருந்த சிமெண்ட் 490 ரூபாய் வரை உயர்ந்ததாகவும், உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது தற்போது 460 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

சிமெண்ட் விலையை மேலும் குறைப்பதாக நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மீண்டும் பேச்சுவார்த்தை  நடத்தி தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலையை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். 

Related Stories: