×

தருமபுரி அரசு மருத்துவமனையில் காணாமல் போன ஆண் குழந்தை 2 நாட்களில் மீட்பு!: 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை...!!

தருமபுரி: தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணாமல் போன ஆண் குழந்தை 2 நாட்களில் மீட்கப்பட்டிருக்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சினூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணியின் மனைவி மாலினிக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 


மறுநாள் மாலினி இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்றுவிட்டு திரும்பிய போது படுக்கையில் உறங்கி கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார், சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் தருமபுரி அடுத்த இண்டுவை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. 


இதையடுத்து அங்கு சென்ற போலீசை குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்தியதாக அந்த பெண்ணையும், குழந்தை கடத்தலுக்கு உதவியதாக அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் 2 பேர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணியாக தான் இருந்த போது கரு கலைந்துவிட்டதாகவும் ஆனால் தொடர்ந்து கர்பிணியாகவே நடித்து குழந்தையை கடத்தி குழந்தை பிறந்ததாக உறவினர்களை ஏமாற்றியதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 


தருமபுரி மருத்துவமனை பிரசவ வார்டில் பாதுகாப்பு குறைபாடே குழந்தை கடத்தலுக்கு காரணம் என்றும் பிரசவ வார்டை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடத்தப்பட்ட குழந்தையின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 



Tags : Dharamapuri ,Government Hospital , Dharmapuri Government Hospital, baby boy, 4 arrested
× RELATED முற்றுகை போராட்டம்