×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை திருத்த சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை: வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதி பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைப்பதற்குமான கடன் வரம்பினை பெறுவதற்கான கால வரம்பை 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆண்டொன்றுக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.05 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதிக்குழு மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன் பெறுவதற்கான வரம்பினை 2021 - 22ல் 4 விழுக்காடாகவும் 2022 - 2023ல் 3.5 விழுக்காடாகவும், 2023 - 24 முதல் 2025 - 26 வரையிலான ஆண்டுகளில் 3 விழுக்காடாகவும் பரிந்துரைத்துள்ளது.

நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதிநிலை பற்றாக்குறையை மொத்த மாநில மதிப்பீட்டில் 3 விழுக்காடு வரை குறைப்பதற்குமான கால வரம்பினை 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழ்நாடு நிர்வாகத்தில் பொறுப்புடைமை திருத்த சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதற்காக சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.



Tags : Tamil Nadu , finance law, tn assembly
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...