×

மத்திய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா எதிர்ப்பு: மஹாராஷ்டிரா, கேரளா உள்பட 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா, சிறு துறைமுகங்களில் மாநில அரசுகளின் நீண்டகால உரிமைகளை பறிக்கிறது எனக்குறிப்பிட்டு இந்த மசோதாவுக்கு எதிராக ஒன்றுத்திரள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுவதால் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என கூறினார்.



Tags : Central Government ,Maharashtra, Kerala ,Q. Stalin , Federal Government, Indian Ports, Bill, Opposition
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...