சென்னையில் வாகன தணிக்கையின் போது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!: கார் பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருடன் வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வால்டாக் சாலையில் பத்மநாப தியேட்டர் அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து எதிர்திசையில் தாறுமாறாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது காரில் இருந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்ததால் கட்டுப்பாட்டு அறை மற்றும் இரவு ரோந்து காவல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஏழு கிணறு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் ராமசந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் வழக்கறிஞர் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, காரில் இருந்த வழக்கறிஞரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரையும் போலீசார் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தகராறு செய்த வழக்கறிஞர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அண்மையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் சோதனையில் ஈடுபட்ட போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: