அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு: ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு பற்றி அடையாறு நிதி மகளிர் காவல் நிலையம் பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மணிகண்டன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 24-க்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நடிகை அளித்த புகாரில் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். 

மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னை அடையாறு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டார். அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து,  மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: