மிரள வைக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.120 உயர்வு; சவரன் ரூ.35,720க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,465-க்கும், சவரன் ரூ.35,720க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று கிடுகிடுவென ரூ.496 குறைந்து. சவரன் 36  ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து நகை வாங்குவோரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வரும் நாட்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்து இருப்பது நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்களுக்கு இந்த திடீர் குறைவு வரவேற்பை பெற்று தந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. 

அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories:

>