தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி மருத்துவமனையிலிருந்து அருள்மணி, மாலினி தம்பதியினர் ஆண் குழந்தை கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு 4 பேரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தருமபுரி அருகே இண்டூரைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் குழந்தையை திருடியது விசாரணையில் அம்பலமானது.

Related Stories:

>