கூட்டணிக்குள் குழப்பம் இல்லை ஒருவாரத்துக்கு முன்பே அமைச்சர் பட்டியலை கொடுத்துவிட்டோம்: பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் பேட்டி

திருக்கனூர்: புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குழப்பம் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்பே பாஜ அமைச்சர் பட்டியலை கொடுத்துவிட்டது என சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக சார்பில் யோகா பயிற்சி முகாம் திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் யோகா பயிற்சி துவக்கி வைத்து யோகாசனம் செய்தார்.  பின்னர், அவர் அளித்த பேட்டி: அமைச்சரவை அமைப்பதில் பல்வேறு விதமான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பாஜவை பொறுத்தவரை இந்த ஆட்சி அமைப்பதற்கு அனைத்து வகையிலும் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். பாஜ சார்பில் யார் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற பட்டியலை ஒரு வாரத்துக்கு முன்பே முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அவர் இனிமேல் பட்டியலை இறுதி செய்து கவர்னரிடம் ஒப்படைத்து, விரைவில் அமைச்சரவை பதவியேற்பதற்கான நாளையும், தேதியையும் குறிப்பிட்டு வெளியிடுவார்.  எங்களது கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது.  அமைச்சரவையை காரணம் காட்டி இதுவரை எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படவில்லை. இதனை எதிக்கட்சி நண்பர்களும், பொதுமக்களும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>