பாலியல் வன்முறைகளுக்கு பெண்களின் அரைகுறை ஆடைகளே காரணம்: பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: ‘பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரை குறை ஆடை அணிவதே காரணம்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்ஓபி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், ‘‘பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது  மோசமானது’’ என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இம்ரானின் ஆண் ஆதிக்க போக்கு கண்டனத்திற்கு உரியது என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.  இதே பேட்டியில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டுமென இம்ரான் மீண்டும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் 24 மணி நேரத்திற்கு 11 பாலியல் வழக்குகள் பதிவா கின்றன. பலாத்கார வழக்கு களில் 0.3 % பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: