அமெரிக்க போர் கப்பலை பரிசோதனை செய்ய அட்லாண்டிக் கடலில் பயங்கர குண்டுவெடிப்பு: 3.9 ரிக்டர் அளவில் அதிர்வு

மியாமி: அமெரிக்காவில் தயாரான போர் கப்பலின் முழு அதிர்வு திறனை பரிசோதிக்க 18,144 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இதன் போது, அட்லாண்டிக் பெருங்கடலில் 3.9 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக இந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க கடற்படைகள் முக்கிய பங்காற்றின. அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜெரால்ட் ஆர் போர்டு நினைவாக, புதிதாக, மிக உயர்ந்த நவீன தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி போர் கப்பல் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டது. இது போன்று தயாரிக்கப்படும் போர் கப்பல்கள் போரின் போது ஏற்படும் கடுமையான மற்றும் தொடர் அதிர்வுகளை தாங்கி போரை எதிர்கொள்ள முடியுமா என்பதை அறிவதற்கு முழு அதிர்வு திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

அதன்படி, விமானம் தாங்கி போர் கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது, 18,144 கிலோ கிராம் வெடி மருந்தை வெடிக்க செய்து, கப்பலின் அதிர்வு திறன் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, கடல்நீர் மிகப் பெரிய ஊற்று போல கடலின் நடுவே பீறிட்டு பொங்கி எழுந்தது. இதனால், அப்பகுதியில் 3.9 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து அமெரிக்க கப்பற்படை தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ``புதிதாக வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஜெரால்ட் ஆர் போர்டின் முழு அதிர்வு திறன் வெடி மருந்து வெடிக்க செய்து பரிசோதிக்கப்பட்டது. போரை எதிர் கொள்ளும் கடின சூழலிலும், போருக்கு தேவையான தகுதிகளுடன் தொடர்ந்து செயல்படும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>