பைடனை சந்திக்கிறார் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி

வாஷிங்டன்:  அமெரிக்க அதிபர் பைடனை ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர்  ஜென் சாகி கூறுகையில், ‘‘வரும் ஜூன் 25ம் தேதியன்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.  பொருளாதார வளர்ச்சியிலும், மனிதாபிமான அடிப்படையிலும் ஆப்கன் மக்களுக்கு அமெரிக்கா உதவி செய்யும். ஆப்கனில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்காத அளவிலான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ராணுவம் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டாலும் அமைதி நடவடிக்கைக்காக தேவைப்படும் முழு உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>