உலகளவில் இந்தியாவுக்கு 5வது இடம் அந்நிய நேரடி முதலீடு ₹4.6 லட்சம் கோடி: ஐ.நா தகவல்

ஐக்கிய நாடுகள்: கடந்த ஆண்டு இந்தியாவுக்கு நேரடி அந்நிய முதலீடு ₹4.6 லட்சம் கோடி கிடைத்திருப்பதாகவும், உலக அளவில் இந்தியா 5ம் இடம் பிடித்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. ஐ.நா வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு சார்பில் உலக முதலீட்டு அறிக்கை 2021 வெளியிடப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக, உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டில் 35% அளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ₹109.5 லட்சம் கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2020ம் ஆண்டில் ₹73 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2020ல் அந்நிய நேரடி முதலீடு 27% அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 2019ல் ₹37.3 லட்சம் கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடு, 2020ல் ₹4.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் காரணமாக உலக அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>