இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு சதவீதம் சரிவு: ஊரடங்கில் மக்கள் ‘அதே மூடில்’ உள்ளதாக கூறுவது கட்டுக்கதை

புதுடெல்லி: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 1980ல் இருந்து ‘ஒரே குழந்தை திட்டம்’ கடைபிடிக்கப்பட்டு வந்தது. இது போன்ற கொள்கை முடிவுகள் மக்கள்தொகை பெருக்கத்தைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2016ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ‘இரண்டு குழந்தை திட்டம்’ கொண்டு வரப்பட்டது. குறுகிய காலத்தில் மீண்டும் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று சீனா அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால், சீனாவில் பிறப்பு எண்ணிக்கையில் வியக்கத்தக்க அளவு சரிவு ஏற்பட்டுள்ளதால், 3 குழந்ததை திட்டம் கொண்டு வரப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது, சீனாவில் மிகப் பெரிய கொள்கை மாற்றம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்துள்ளதாகவும், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீனா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் மக்களை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இன்னும் அதன் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகக் கூறுகிறது. தற்போது, ஏற்பட்டுள்ள கருவுறுதல் சரிவு காரணமாக 2030ம் ஆண்டே சீனாவின் மக்கள் தொகை யில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் 2100ம் ஆண்டில் சீனா 60 முதல் 70 கோடி மக்களை (தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதி) இழக்கக்கூடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல், பல்வேறு நாடுகளிலும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவின் பிறப்பு விகிதம் 2007ம் ஆண்டு இருந்து தற்போது வரை 19% குறைந்துள்ளது. ஒரு நாடு இயற்கையாகவே அதன் மக்கள்தொகையை மாற்றுவதற்கு, அதன் பிறப்பு விகிதம் குறைந்தபட்சம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், சீனா 1.3 சதவீதம், அமெரிக்க 1.6%, இந்தியா 2.1% , ஜப்பான் 1.3%, ரஷ்யா 1.6%, பிரேசில் 1.8%, வங்கதேசம் 1.7%, இந்தோனேசியா 2.0 சதவீத பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளன.  பாகிஸ்தான் (3.4) மற்றும் நைஜீரியா (5.1) போன்ற அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட பெரிய நாடுகள் இன்னும் உள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை 1960ல் பாகிஸ்தானில் 6.6 ஆகவும், நைஜீரியாவில் 6.4 ஆகவும் இருந்தது.

தற்போது உள்ள விகிதத்தை பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் குறை ந்து வருவது தெரிகிறது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள், ‘அதே மூடில்’ இருப்பதால், கருவுறுதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. தொற்றுநோய் தொடர்பான பொருளாதார பாதுகாப்பின்மையின் விளைவாக அமெரிக்காவில் 3 லட்சம் குழந்தைகள் பிறக்கவில்லை என்று ப்ரூக்கிங்ஸ் நிறுவனம் மதிப்பிடுகிறது. இதேபோல், முதலாம் உலகப் போருக்கு பிறகு ஆஸ்திரேலியா,  2020ம் ஆண்டில் மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்தது. 1960களில் ஓய்வுபெற்ற ஒவ்வொரு நபருக்கும் வேலை செய்யும் வயதில் ஆறு பேர் இருந்தனர். இன்று, விகிதம் மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளது. 2035க்குள், அது இரண்டில் இருந்து ஒன்றாக குறையும். பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலக நாடுகளை கவலையடை செய்துள்ளது.

அசாமில் இரண்டு குழந்தைகள் திட்டம

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா வெளியிட்ட அறிவிப்பில், ‘அசாமில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை மாநில அரசு படிப்படியாக அமல்படுத்தும். அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், அரசு சலுகைகள், கடன் தள்ளுபடி உள்ளிட்ட சில குறிப்பிட்ட நலத்திட்டங்களை அனுபவிக்க முடியாது. இது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பொருந்தாது,’ என கூறியுள்ளார்.

Related Stories: