விருதுநகர் அருகே சிங்கம் உலா வருவதாக வலைதளங்களில் வைரல்

விருதுநகர்: விருதுநகர் அருகே தனியார் சிமென்ட் ஆலை பின்புறம் சிங்கம் ஒன்று உலா வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  சமூக வலைதளங்களில் சிங்கம் ஒன்று, சிமென்ட் ஆலையின் பின்புறம் உள்ள முட்புதர்களுக்கு அருகே உலா வரும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ 19 வினாடிகள் ஓடுகிறது.  விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. இந்த வீடியோ இந்த ஆலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டது என்று, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஆர்.ஆர்.நகர் சிமென்ட் ஆலைக்கு பின்புறம் எடுக்கப்பட்டது அல்ல என்று விருதுநகர் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆர்.ஆர்.நகரிலுள்ள சிமென்ட் ஆலையின் பின்புறம் முட்புதர்களே இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில் அடர்ந்த முட்புதருக்கு அருகே சிங்கம் உலா வருவது போன்று உள்ளது. ஆகையால் இந்த வீடியோ வேறு ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

Related Stories:

>