வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 363 பேருக்கு, முதல் தவணையும், 60 ஆயிரத்து 320 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு, கல்வி பயில செல்வோர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்போர் நலனை கருத்தில் கொண்டு 2வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை 28 நாட்கள் முடிந்தவுடன் 84 நாட்களுக்கு முன்பே போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் மேற்கண்ட மூன்று பிரிவினரும் இது தொடர்பான ஆவணங்களை கொடுத்து 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 80980 01576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: