×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: மழை காரணமாக 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

சௌத்தெம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - மழை காரணமாக 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்திய அணியை விட 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளனர். 2-வது நாளான நேற்று முன்தினம் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் (12 ரன்), ராஸ் டெய்லர் (0) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


Tags : World Test Championship Finals , World Test, Championship, Final, Rain
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...