தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா; ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. மாலை மணி 5 வரை நாடு முழுவதும்  69.25 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து 6-வது நாளாக 30 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை  262 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 27,09,08,312 அதாவது 27 கோடிப் பேர் இந்தியர்கள். இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர்.

 ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த தினசரி தடுப்பூசி இலக்கு  43 லட்சம் ஆகும். ஜூன் 14 அன்று 38.2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  நாட்டில் தினசரி தடுப்பூசி அளவு முதல் முறையாக இன்று  50 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பு  திட்டத்தின் படி, மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 1 ஆம் தேதி 45+ மக்கள் தொகைக்கு அல்லது 34.51 கோடி மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>