புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்: சத்யபிரதா சாகு பதில் மனு தாக்கல் !

சென்னை: ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அதில், வாக்காளர்களின் வசதிக்காகவே சின்னங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பிரிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை  செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை விரைந்து நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களை பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தக்கூடாது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் சின்னம் திரும்பப் பெறப்படும், தேர்தல் ரத்து செய்யப்படும். நிரந்தர சின்னங்களை ஒதுக்குவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய தலைமை தேர்தல் அதிகாரி கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் அதிகாரி பதில் மனுவை அடுத்து வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories:

>