இருள் மண்டி கிடந்த தமிழகத்தில் விடியலின் வெளிச்ச ஒளிக்கீற்றாக ஆளுநர் உரை அமைந்துள்ளது!: தலைவர்கள் வரவேற்பு..!!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை தொடங்கினார். இந்நிலையில் ஆளுநர் உரைக்கு தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வளர்ச்சி பாதையில் பயணிக்க போகிறது என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டிருக்கிறார். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் பீடுநடை போடும் என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திராவிட இயக்க அரசாக செயல்படும் என்பதற்கு கட்டியங்கூரத்தக்க வகையில் ஆளுநர் உரை அமைந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ்: 

வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, சேவை உரிமை சட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், நீட் ஒழிப்புக்கு தெளிவான செயல்திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

முத்தரசன்

இருள் மண்டி கிடந்த தமிழகத்தில் விடியலின் வெளிச்ச ஒளிக்கீற்றாக ஆளுநர் உரை அமைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்றுள்ளார். 

Related Stories: