நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு: ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் பேட்டி

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் 2-ம் கட்டமாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம். நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

Related Stories:

>