முக்கிய செய்தி தமிழகம் கொரோனா பரவல் எதிரோலி: திருவண்ணாமலையில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு Jun 21, 2021 கொரோனா கிரிவல்லா திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலம் செல்ல ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 14 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு