மினிலாரியில் கடத்திய ₹5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் செஞ்சி  காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் வளத்தி காவல் ஆய்வாளர்  கலைச்செல்வி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார்  மேல்மலையனூர் தாலுகாவில் அமைந்துள்ள ஞானோதயம் மாவட்ட எல்லை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 41 மூட்டையில் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

 இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சின்னார் கிராமத்தை சேர்ந்த குள்ளியப்பன் மகன் சதிஷ் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: