பப்ஜி மதன் நடத்திய யூடியூப் சேனல் முடக்கம்-2 ஆண்டாக பதிவிட்ட வீடியோ நீக்கம்

சென்னை : பப்ஜி விளையாட்டு மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை தனது யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் மதன்பேசி வந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து யூடியூப் சேனல் நடத்தி வந்த மதனை தேடிவந்தனர்.

இந்நிலையில் யூடியூப் சேனல் அட்மினாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையி ல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.  அவர் தனது யூடியூப் சேனல் ஊழியர்களை அமர்த்திஆன்லைன் விளையாட்டை பின்தொடர்ந்து வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களை ஆபாசமாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. மோசடியாக சம்பாதித்த பணத்தில் சொகுசு கார் ஆடம்பரமான பங்காளக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மதனின் வங்கி கணக்குகளில் பண இருப்புகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மதன் நடத்தி வந்த சர்ச்கைக்குரிய யூ-டியூப் சேனல் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி போலீசார் சார்பில் யூடியூப் சேனல் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை தொடர்ந்து யூடியூப் சேனல் நிர்வாகம் மதன் நடத்தி வந்த சேனலை தடை செய்தது. மேலும் அந்த யூடியூப் சேனலில் 2 ஆண்டுகளுக்கான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் மதனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யக்கூடும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: