கே.வி.குப்பம் அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலைய கட்டிடம்-கண்டுகொள்ளாத சுகாதார துறையினர்

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசி பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுமார் ₹5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் ஆந்திர எல்லையோரம் உள்ளது. மலையையொட்டி உள்ள பகுதியான தொண்டான்துளசியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே அதிகம். மேலும், மாடு, ஆடு வளர்த்தல், கூலி தொழில் உள்ளிட்டவை பரவலாக உள்ளது.

இந்நிலையில் துணை  சுகாதார நிலைத்தை வாரம் இருமுறை திறக்க வேண்டும். ஆனால் சரிவர  திறக்காமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் துணை  சுகாதார நிலை கட்டிடம் பாழடைவதோடு, அப்பகுதி மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தொண்டான்துளசியிலிருந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு  செல்ல சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

சுமார் 45 நிமிடம் வரை பயணித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல சிரமமாக உள்ளது. முக்கிய  மருத்துவ பிரச்னைகளை குறித்து உடனடியாக தீர்வு காண லத்தேரி ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. லத்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லாமல் தற்போது உள்ள இந்த துணை சுகாதார நிலையத்தினை தரம் உயர்த்தி, தினம் ஒரு மருத்துவர், செவிலியர்களை நியமித்து  கூடுதல் படுக்கை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>