ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.35,480-க்கு விற்பனை..கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!!

சென்னை: கடந்த 4 நாட்களாக சரிவை சந்திருந்த தங்கம் விலை இன்று உயர்வை கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்று தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,430க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.35,440க்கும் விற்கப்பட்டது. மாலையில் என்ற மாற்றமும் இல்லை. இந்நிலையில், தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று சற்று உயர்வை கண்டிருக்கிறது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. 

வரும் நாட்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்களுக்கு இந்த விலை ஏற்றம் ஏமாற்றத்தை பெற்று தந்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்திருப்பது நகை பிரியர்களை வேதனையடைய செய்துள்ளது. 

Related Stories: