கர்நாடகாவில் இன்று முதல் 3 ஆயிரம் பஸ்கள் இயக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து  வரும் 16 மாவட்டங்களில் இன்று முதல் பஸ் சேவை மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டங்கள் இடையே பஸ் சேவை தொடங்குகிறது. காலை 6 மணி முதல் 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும். பாதிப்பு அதிகமுள்ள  மைசூரு மாவட்டத்துக்கு பஸ் இயக்க அனுமதி இல்லை. அதே நேரம் பஸ்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பெங்களூரு நகர பஸ்களும் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் தொடங்குகிறது.  கொரோனா தடுப்பு விதிகள் 100 சதவீதம் கடைபிடிக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். அண்டை மாநிலங்கள் இடையே பஸ் போக்குவரத்து தொடங்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>