உ.பி. தேர்தலுக்கு அச்சாரம் அடுத்த மாதம் முதல் மோடி ரெகுலர் விசிட்

லக்னோ:  உத்தரப்பிரதேச த்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அம்மாநிலத்தில் முதல்வர் யோகி  ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பாஜவின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதை சரி கட்ட அடுத்த மாதம் முதல் பிரதமர் மோடி அங்கு அடிக்கடி செல்ல இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.  கொரோனா காரணமாக ,கடந்த 2 ஆண்டாக உபி.யில் உள்ள தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு கூட மோடி செல்லவில்லை.

  தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு அவர், அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அங்கு சென்று அரசின் திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகளை கவனிப்பதுடன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி மட்டுமின்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்களும் உபிக்கு அடிக்கடி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>