சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு அக். 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை  தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வை வரும் 27ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>