பசுக்களை கடத்தியதாக 3 பேர் அடித்து கொலை: கிராம மக்கள் வெறிச்செயல்

அகர்தலா: பசு பாதுகாவலர்கள் பிரச்னை சிறிது காலமாக ஒடுங்கி இருந்தது. இப்போது மீண்டும் பல மாநிலங்களில் தலை தூக்கியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கோவாய் மாவட்டத்தில் நேற்று அதிகாலைமினி டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த மினி டிரக்கில் பசுக்கள் இருந்தன. இதனால், நமஞ்சோய்பராவை சேர்ந்த கிராமவாசிகள் பசுக்கள் கடத்தப்படுவதாக எண்ணி வாகனத்தை துரத்திச் சென்று பிடித்தனர்.  வாகனத்தில் இருந்த வர்களை கிராமமக்கள் கொடூரமாக தாக்கியதில் 2 பேர் அதே இடத்தில் இறந்தனர். மற்றொருவர் காயத்துடன் தப்பியோடினார். அவரை பிடித்த கிராம மக்கள், தங்கள் கிராமத்துக்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.  படுகாயமடைந்த அவரும் இறந்தார்.  கொல்லப்பட்ட மூவரும் திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வாகனம் ஏற்றி பசு பாதுகாவலர் படுகொலை

குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் கன்சரா என்ற இளைஞர் பசு பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த வெள்ளியன்று பசுக்கள் ஏற்றி வந்த டெம்போவை மடக்கிப் பிடிக்க முயன்றார். ஆனால், வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், கன்சரா உடல் நசுங்கி இறந்தார்.

Related Stories: