தந்தை கொரோனாவுக்கு பலியான 9வது நாளில் ஒடிசா பாடகி தொற்றுக்கு பலி

புவனேஸ்வர்: ஒடிசா படவுலகில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர், தபு மிஸ்ரா (வயது 36).  இந்தி, பெங்காலி, பஞ்சாபி உள்பட பல மொழிப் படங்களில் பாடியுள்ள அவர், ஒடிசாவில் 150 படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.  சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தபு மிஸ்ரா, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறி வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென்று அவரது ஆக்சிஜன் அளவு 45க்கு கீழே குறைந்தது.  இதையடுத்து வீட்டில் தனிமையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வேறு இணை நோய்கள் இல்லை என்றாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தனது தந்தை கொரோனா பாதிப்புக்கு பலியான 9வது நாளில் தனக்கும் தொற்று ஏற்பட்டு தீபா மிஸ்ரா பலியான சம்பவம், ஒடிசா படவுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>