சொல்லிட்டாங்க...

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகதாதுவில்  தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால், அவர்களை அனுமதித்து, கல்வி கட்டணத்தை பின்னாளில் பள்ளி நிர்வாகம் வசூலிக்க அனுமதிக்கலாம்.  - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையின் முதல்  கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்  தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

மக்கள் செருப்பால்  அடிப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே யாரை குறிப்பிட்டார் என்று தெரியவில்லை.  இப்போது இருப்பது நிரந்தர  கூட்டணியல்ல.  - மகாராஷ்ரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே

Related Stories:

>