புதிதாக தடுப்பணை அமைப்பது தொடர்பாக ஜூன் 30க்குள் அறிக்கை கேட்கிறது நீர்வளத்துறை

சென்னை:  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஏரி, குளங்களை புனரமைப்பு, தடுப்பணை, புதிதாக நீர் நிலைகளை உருவாக்குவது, புதிதாக நதிகளை இணைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யுமாறு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார்.   அதன்பேரில், ஒவ்வொரு மாவட்டத்தில் தூர்வார வேண்டிய ஏரி, குளங்களின் விவரங்கள், எங்கெங்கு தடுப்பணைகள் அமைக்கலாம், புதிதாக நீர் நிலைகளை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்து வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.   ஒவ்வொரு கோட்ட நீர்வளத்துறை பொறியாளர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏரி, குளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: