சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்கு பொறியாளர்கள் நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளது. இந்த மண்டலங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொருளாதார மண்டலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையில் எல்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதற்கான பணிகளை மேற்கொள்ள எல்காட் நிறுவனம் சார்பில் கட்டுமான பணிக்கு தகுதி வாய்ந்த பொறியாளர்களை அயல்பணி அடிப்படையில் அனுப்பி வைக்குமாறு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில்,  எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் கட்டுமான பணியில் திறமையும், அனுபவம் வாய்ந்த உதவி பொறியாளர்களை எல்காட் சிறப்பு பொருளாதார திட்டத்துக்காக பயன்படுத்த முடிவு  செய்துள்ளோம். எனவே, உதவி பொறியாளர்களை அயல்பணி அடிப்படையில் பணியாற்ற அனுப்பி வைக்க வேண்டும். எனவே, பொதுப்பணி, நீர்வளத்துறையில் பணியாற்றும் உதவி பொறியாளர்கள் தமிழ்நாடு மின்னனு கழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூன் 24ம் தேதிக்குள் விருப்ப மனுவை கடிதம் எழுதி தங்களது பணி விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: