நெல்லை மாநகரில் தொடரும் வெயில் தாக்கம்: பொள்ளாச்சி இளநீர் விற்பனை ஜோர்

நெல்லை: நெல்லை மாநகரில் அக்னி நட்சத்திரம் கடந்த பிறகும் தொடரும் வெயில் தாக்கத்தால் பொள்ளாச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட இளநீர் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. கடந்த மாதம் அக்னி நட்சத்திர கோடை வெயில் முடிவுக்கு வந்தாலும் நெல்லை மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் ெதாடர்ந்து அதிகமாக உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்தாலும் வெயிலும் அவ்வப்போது சுட்டெரிக்கிறது.

இதனால் குளிர்பானங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. நெல்லையில் பல்வேறு பகுதிகளில் இளநீர், நுங்கு விற்பனை கடைகள் தோன்றியுள்ளன. பொள்ளாச்சியில் இருந்து செவ்விளநீர் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன, ஒரு இளநீர் ரூ.40,45,50 என்ற விலையில் அதன் அளவிற்கு ஏற்ப விற்கப்படுகின்றன. நெல்லையில் நேற்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 99 டிகிரியாக இருந்தது. பிற்பகலில் அனல் காற்று வீசியது.

Related Stories: