தேச துரோக வழக்குப்பதிவு: போலீஸ் விசாரணைக்காக லட்சத்தீவு பறந்த நடிகை

திருவனந்தபுரம்: லட்சத்தீவு நிர்வாகியாக புதிதாக பொறுப்பேற்ற பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வந்த கெடுபிடி சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை கண்டித்து ேபாராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லட்சத்தீவை சேர்ந்த நடிகையும், இயக்குனருமான ஆயினா சுல்தானா ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது மத்திய அரசும், பிரபுல் கோடா பட்டேலும் லட்சத்தீவு மக்கள் மீது உயிரி ஆயுதமாக கொரோனாவை பரப்பினர் என்று கூறினார். இதையடுத்து ஆயிஷா சுல்தானுக்கு எதிராக தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லட்சத்தீவு பாஜ தலைவர் அப்துல் காதர் கவரத்தி ேபாலீசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குபதிவு செய்தனர். அதன்படி இன்று (20ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே நடிகை ஆயிஷா சுல்தானா முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. அப்போது ஆயிஷா சுல்தானா போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், கைது செய்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து ஆயிஷா சுல்தானான நேற்று கொச்சியில் இருந்து விமானம் மூலம் லட்சத்தீவு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக அவர் கூறியது: போலீசாரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். லட்சத்தீவு மக்களுக்கான போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றார்.

Related Stories:

>