இதுவரை போட்டது 27 கோடி டோஸ் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை தகவல்

புதுடெல்லி: இதுவரை நாடு முழுவதும் 27 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 28 கோடியே 50 லட்சத்து 99 ஆயிரத்து 130 டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதுவரை, 25 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரத்து 45 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 2 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 85 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்து 85 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரையில் 27 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 783 டோஸ் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 52 லட்சத்து 26 ஆயிரத்து 460 தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: