சுவர் இடிந்து வாலிபர் உயிரிழப்பு: பெரியபாளையம் அருகே பரிதாபம்

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (30). இவர், சலூன் கடை நடத்தினார். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளித்துள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு  சென்ற சத்யராஜ், நீச்சல் தெரியாததால் தத்தளித்துள்ளார். நண்பர்களால் அவரை காப்பாற்ற முடியாததால் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்களாலும் சத்யராஜை மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்துவந்து ஏரியில் இறங்கி தேடினர்.

இரவாகிவிட்டதால் தேடும்பணியை நிறுத்திவிட்டு மீண்டும் இன்று அதிகாலை தேடினர். இந்த நிலையில், ஏரியில் இருந்து சத்யராஜ் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>