புழல் சாலையில் சென்ற போது கார் திடீர் தீப்பற்றி எரிந்து நாசம்

புழல்: புழல் காவாங்கரை தமிழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் (26). இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று அங்கிருந்த காரை எடுத்துக்கொண்டு இன்று அதிகாலை ஐந்தரை  மணி அளவில்  புழல் நோக்கி வந்து கொண்டிருந்தார். புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே வந்தபோது காரின் முன்பக்கம் இன்ஜினில் இருந்து புகை வருவதை கண்டதும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே  இறங்கியபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.

சம்பவம் குறித்து உடடியாக  புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>