காதல் மனைவி பிரிந்து சென்றதால் மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிரிந்த தனியார் கம்பெனி ஊழியர் நேற்று மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருக்கழுக்குன்றம் அருகே ஈச்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயன் (34). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சத்யா கணவரை பிரிந்து, கடந்த 4 ஆண்டுகளாக தாய்வீட்டில் வசித்து வருகிறார். இதில் உதயன் மனமுடைந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

இந்நிலையில், அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று மாலை கடும் மனஉளைச்சலில் உதயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு உதயனின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>