தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசின்  நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10-ஆக இருந்த வரியை ரூ.32.9 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியுள்ளார். திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை 2 வாரங்களில் அறிக்கை வெளியிடப்படும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. 

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்து கொள்கிறது. ரூபாய் 98 விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும் என கூறினார். 

Related Stories:

>