சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம்: 2 டோஸ் போட்டுக்கொள்ளும் போது 91.6% எதிர்ப்புசக்தி: 3 வார இடைவெளிக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படும்

சென்னை: ரஷ்யாவின் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்கள் கடந்த மாதம் ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. டாக்டர் ரெட்டிஸ் லேபாரடரீஸ் தலைமை இடமான ஐதராபாத்தில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை உட்பட ஒன்பது நகரங்களில் சோதனை ஓட்ட பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் -18 டிகிரியில் தடுப்பூசி சேமித்து வைத்து தடுப்பூசி மையங்களுக்கு அனுப்ப முடிகிறதா, கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய முடிகிறதா என்பது உள்ளிட்டவை சோதித்து பார்க்கப்பட்டது.

அதன்பிறகு சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரடரீஸ் ஊழியர்களுக்கு ஓரிரு நாட்களில் ஸ்புட்னிக் -வி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி,மும்பை, கொல்கத்தா பெங்களூர், விசாகப்பட்டினம், கோலாபூர் ஆகிய நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக கூறினர். இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இந்தியாவில் முதன்முறையாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஸ்புட்னிக்-வி அறிமுகம் செய்யப்பட்டது. இது 2 டோஸ்கள் போட்டுக் கொள்ளும் போது 91.6% எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஒரு டோஸ் போட்டுக் கொண்ட பிறகு 2வது டோஸ் 3 வார இடைவெளிக்கு பிறகு செலுத்தப்படும். ஒரு டோஸ் மற்றும் அலுவலக கட்டணம் உட்பட விலை ரூ.1,145 என தெரிவித்துள்ளது.

Related Stories:

>