சட்டசபை முடியும் வரை சுற்றுப்பயணத்தை தவிர்க்க வேண்டும்: ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை:  மின்வாரிய அனைத்து இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவை 21ம் தேதி தொடங்குகிறது. அனைத்து இயக்குனர்கள், சட்ட ஆலோசகர்கள், தலைமை பொறியாளர்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டாளர்கள், தலைமை உள் தணிக்கை அதிகாரி மற்றும் அனைத்து அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு இருக்க வேண்டும். 21ம் தேதி முதல் கூட்டத்தொடர் முடியும் வரையில் அனைத்து வேலை நாட்களிலும் ஊழியர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். இக்கால கட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவின் மேலாண் இயக்குநர் மற்றும் இயக்குநரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும். இந்த உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். மேலும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>