தங்கம் விலை தொடர்ந்து சரிவு 4 நாளில் சவரன் ரூ.1,240 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று 4வது நாளாக சரிவை சந்தித்தது. 4 நாட்களில் சவரன் ரூ.1240 அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ.36,680க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு 16ம் தேதி சவரன் ரூ.64 குறைந்து சவரன் ரூ.36,616, 17ம் தேதி சவரனுக்கு ரூ.616 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்கப்பட்டது. 3வது நாளாக நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,460க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.35,680க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1000 அளவுக்கு குறைந்தது.

இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை 4வது நாளாக சரிவை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,430க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.35,440க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  அதே நேரத்தில் 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும்.

Related Stories: