கணவன் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை சாவு

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஷாவால்ஸ் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் விஜயசந்திரன் (32), கார்ப்பென்டர். இவருக்கு ரம்யா (27) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது ரம்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த விஜய்சந்திரன், சாப்பாடு போடும்படி ரம்யாவிடம் கேட்டுள்ளார். அவர், தாமதமாக சாப்பாடு  கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த விஜயச்சந்திரன், மனைவியை தாக்கி, எட்டி உதைத்துள்ளார். இதில், ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை திருவல்லிக்கேணி அரசு  மருத்துவமனை சென்றபோது, ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து ரம்யாவின் தாயார் சுமதி, விஜயசந்திரன் எட்டி உதைத்ததால்தான் குழந்தை இறந்துவிட்டதாக கூறி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>