தேர்தல் நடைமுறையை தொடங்குவது பற்றி ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் 24ம் தேதி மோடி ஆலோசனை: அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஏ சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்முவில் இயல்பு நிலை திரும்பினால் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும், சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை வரும் 24ம் தேதி பிரதமர் மோடி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அழைப்பு, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட 14 தலைவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Related Stories: