கபினி அணையில் இருந்து 5,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருவதாலும், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையில் 90.40 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,556 அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,164 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கபினி அணையில் நேற்று மாலை நிலவரபடி 2,274 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,213 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் நேற்று இரவு முதல் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>