ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பிக்கு நேற்று 51வது பிறந்தநாள். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில், ‘தன்னிகரற்ற தடகள வீரர் மில்கா சிங், இந்த தேசத்துக்கு புகழ் தேடித் தந்தவர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரால் ஊக்கம் பெற்றனர். மாவீரருக்கு புகழஞ்சலி’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>